மரங்களோடு பேசுதல்
• இன்றைய “கத கேப்போம்” நிகழ்வின் துவக்கத்தில் ஒரு சிறுவனையும் சிறுமியையும் கரும்பலகையின் இரு புறமும் மரத்தை வரையச் சொன்னோம். இரண்டு நேர்கோடுகள் ஒரு வட்டம் என இருவரும் கணித சூத்திரம்போல் ஒரே மாதிரியான ஒன்றை வரைந்தார்கள். ஒரு மரம் நிஜத்தில் இப்படி மட்டும்தான் இருக்கிறதா? ஒரு மரத்திற்கும் இன்னொரு மரத்திற்கும் உள்ள வித்தியாசம்? ஒவ்வொரு மரத்திலும் இலைகளின் வடிவம் எப்படி உள்ளது? குழந்தைகளுடனான ஒரு சிறு உரையாடல் மரங்களை நோக்கி அனைவரையும் அழைத்துச் சென்றது. அண்டு B காஜா ஹூசைன் B. தஸ்னீம் பிர்தௌஸ் குழந்தைகள் குழுவாகப் பிரிந்து பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து மரங்களையும் அருகில் நின்று பார்த்து வந்தனர். தன் சூழலை மிகச்சிறப்பாக உள்வாங்கக்கூடிய குழந்தைகள் மரத்தின் அருகிலேயே அமர்ந்து மர ஓவியத்தை உருவாக்க விரும்பினார்கள். எல்லோரும் உற்சாகமாக மரங்களை சுற்றிக்கொள்ள எப்போதும் பிறரோடு வம்பிழுத்துக...