மரங்களோடு பேசுதல்


இன்றைய “கத கேப்போம்” நிகழ்வின் துவக்கத்தில் ஒரு சிறுவனையும் சிறுமியையும் கரும்பலகையின் இரு புறமும் மரத்தை வரையச் சொன்னோம். இரண்டு நேர்கோடுகள் ஒரு வட்டம் என இருவரும் கணித சூத்திரம்போல் ஒரே மாதிரியான ஒன்றை வரைந்தார்கள். ஒரு மரம் நிஜத்தில் இப்படி மட்டும்தான் இருக்கிறதா? ஒரு மரத்திற்கும் இன்னொரு மரத்திற்கும் உள்ள வித்தியாசம்? ஒவ்வொரு மரத்திலும் இலைகளின் வடிவம் எப்படி உள்ளது? குழந்தைகளுடனான ஒரு சிறு உரையாடல் மரங்களை நோக்கி அனைவரையும் அழைத்துச் சென்றது.   

அண்டு 


                        B காஜா ஹூசைன்



                     B. தஸ்னீம் பிர்தௌஸ்

குழந்தைகள் குழுவாகப் பிரிந்து பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து மரங்களையும் அருகில் நின்று பார்த்து வந்தனர். தன் சூழலை மிகச்சிறப்பாக உள்வாங்கக்கூடிய குழந்தைகள் மரத்தின் அருகிலேயே அமர்ந்து மர ஓவியத்தை உருவாக்க விரும்பினார்கள். எல்லோரும் உற்சாகமாக மரங்களை சுற்றிக்கொள்ள எப்போதும் பிறரோடு வம்பிழுத்துக்கொண்டிருக்கும் இரண்டு சிறுவர்கள் குட்டியான ஒரு செடியின் அருகில் அமர்ந்து குனிந்துகுனிந்து அதில் எதையோ தேடிக்கொண்டிருந்தனர். மரங்களோடான ஒரு உரையாடல்தான் அது.


                                                       B. மனோஜ் குமார்





                                                                 J. காயத்ரி




                          K. சண்முகவேல்


வரையும்முன் மரங்களின் கோட்டோவியங்களைக் கனிணியில் பார்த்தனர். வண்ணம் தீட்ட அவசரம் காட்டாமல் நல்லதொரு மரத்திற்கான தேடலில் சில குழந்தைகள் கோட்டோவியங்களில் நிதானத்தை பழகிக்கொண்டிருந்தனர்.




                                                           K. ஸ்டீபன்





                                                M. மரிய ஜோஸபின்




                         M. வர்ஷினி


குழந்தைகள் வரையும் ஓவியங்களில் அதிகம் வந்துவிடுபவையாக இருக்கின்றன வீடு, மேகம் மற்றும் மரம். அவர்களின் நினைவுகளில் எப்பொழுதும் இவை செழிப்பாக இருந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அதை ஒரு சூத்திரம் போல் எல்லோரும் செய்கையில் கலை அதன் உள்ளார்ந்த அர்த்தங்களையும் குழந்தைகளிடம் நிகழ்த்த வேண்டிய தேடலையும் உற்சாகத்தையும் வறண்டுபோகச் செய்துவிடுகிறது. கதையின் வழியாக, இயற்கையை கூர்ந்து கவனிப்பதன் வழியாக, சமூக அசைவுகளைப் பற்றி உரையாடுவதன் வழியாக குழந்தைகள் உயிரோட்டமான ஓவியங்களை நிகழ்வில் தொடர்ந்து உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

                                                                                             



நவீன்





ரோஸ்லீன்




                           S. அன்பு காட்சன்


நிகழ்வில் பங்கேற்பு  -
ஆறாம் வகுப்பு மாணவ மாணவிகள்
வி.எஸ்.செங்கோட்டையா நினைவு உயர்நிலைப் பள்ளி
சுந்தராபுரம், கோயம்புத்தூர் - 641 024. 

(நிழல்) 


நன்றி : மின்மினி மாத இதழ் (செப்டம்பர் 2015)



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கறுப்புப் பூனை

பூத்தொட்டி