இடுகைகள்

ஆகஸ்ட், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீண்ட பாதை

படம்
• ஒரு நாள் சூரியாவின் பள்ளியில் கோடை விடுமுறை தொடங்கியது. அவன் வீட்டிற்கு வந்தான். அந்த நேரம் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் விளையாட்டாக ஒரு கடிதம் எழுதத் துவங்கினான்.    “அம்மா, என் பள்ளியில் சுற்றுலா அழைத்துச் செல்கிறார்கள். அதனால் நானும் செல்கிறேன்” என எழுதிவிட்டு காட்டிற்கு தனியாகச் சென்றான். அடர்ந்த மரங்களையும் பசும்புதர்களையும் கடந்து செல்கையில் ஒரு மலைச்சரிவில் சிறிய குகை ஒன்றைப் பார்த்தான்.  அதனுள் செல்ல ஆசையாக இருந்தது. குகைக்குள் நுழைந்த உடனே குகை திடீரென மூடிவிட்டது.  பயந்து அழுதுகொண்டே உள்ளே நடந்தால் அங்கே நிலம் பாலைவனமாக இருந்தது.  சவாலான பாலைவனத்தை நடந்து நடந்து கடக்கையில் 2கிமீ தூரம் ஆகிவிட்டது. அதற்கு அடுத்த இடம் அவனை நடுங்க வைத்தது. அது ஒரு பனிப்பிரதேசமாக மாறி இருந்தது.  அதுவும் 2 கிமீ தூரத்துடன் முடிகையில் வியப்பு. அடுத்த 2 கிமீ தூரம் வண்ணங்கள் இறைந்து கிடந்தது. அது இதுவரை அவன் காணாத வானவில் பாதை. அதில் சறுக்கியபடி பயணித்தான். வானவில் பாதை முடியும் இடம் அவன் பாதத்தை என்னவோ செய்தது. அத