நீண்ட பாதை

ஒரு நாள் சூரியாவின் பள்ளியில் கோடை விடுமுறை தொடங்கியது. அவன் வீட்டிற்கு வந்தான். அந்த நேரம் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் விளையாட்டாக ஒரு கடிதம் எழுதத் துவங்கினான்.   



“அம்மா, என் பள்ளியில் சுற்றுலா அழைத்துச் செல்கிறார்கள். அதனால் நானும் செல்கிறேன்” என எழுதிவிட்டு காட்டிற்கு தனியாகச் சென்றான். அடர்ந்த மரங்களையும் பசும்புதர்களையும் கடந்து செல்கையில் ஒரு மலைச்சரிவில் சிறிய குகை ஒன்றைப் பார்த்தான்.  அதனுள் செல்ல ஆசையாக இருந்தது.




குகைக்குள் நுழைந்த உடனே குகை திடீரென மூடிவிட்டது.  பயந்து அழுதுகொண்டே உள்ளே நடந்தால் அங்கே நிலம் பாலைவனமாக இருந்தது.  சவாலான பாலைவனத்தை நடந்து நடந்து கடக்கையில் 2கிமீ தூரம் ஆகிவிட்டது.




அதற்கு அடுத்த இடம் அவனை நடுங்க வைத்தது. அது ஒரு பனிப்பிரதேசமாக மாறி இருந்தது.  அதுவும் 2 கிமீ தூரத்துடன் முடிகையில் வியப்பு.




அடுத்த 2 கிமீ தூரம் வண்ணங்கள் இறைந்து கிடந்தது. அது இதுவரை அவன் காணாத வானவில் பாதை. அதில் சறுக்கியபடி பயணித்தான்.




வானவில் பாதை முடியும் இடம் அவன் பாதத்தை என்னவோ செய்தது. அது வெண்மையான இதமான மேகப் பாதையாக மாறியிருப்பதை கவனித்தான்.  அதில் தாவித்தாவி ஓடினான். அன்று இரவு 10 மணிக்குள் 8 கிமீ தூரத்தை தைரியமும் பயமுமாகக் கடந்திருந்தான்.




மறுநாளும் தன் நீண்ட பயணத்தை சலிப்பின்றி தொடர்ந்தவன் எதுவுமே இல்லாத ஓர் அகன்ற காலி இடம் வந்த பொழுது திகைத்தான். ஆனால் தொலைவில் ஒரு வித்தியாசமான கதவு தனியாக நிற்பதைக் கண்டான். மெல்ல அருகில் சென்று பயத்துடன் திறந்து பார்த்தால் கதவுக்கு உள்ளே அவனது பள்ளிக்கூடம்.  கதவுக்குள் நுழைந்தவன் உற்சாகமாக நேரே வீட்டிற்கு ஓடினான்.



கதை :
S. ஸ்ரீஹரி

ஆறாம் வகுப்பு
அரசு உயர்நிலைப்பள்ளி, 
காமராஜ் நகர், சுந்தராபுரம், 
கோயம்புத்துர்.


ஓவியங்கள் :
R. விவேக், G. ஆதேஸ், M. வெங்கடேசன்,
N. தனுஷ், S. சுதர்சன்,
லில்லர் போஸ், S. நவீன் குமார்

ஏழாம் வகுப்பு,
வி.எஸ். செங்கோட்டையா நினைவு உயர்நிலைப்பள்ளி, 
சுந்தராபுரம், 
கோயம்புத்துர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மரங்களோடு பேசுதல்

கறுப்புப் பூனை

பூத்தொட்டி