மந்திர குண்டு
ஒரு நாள் நான் விளையாடிட்டு இருக்கும்போது
ஒரு குண்டப் பாத்தேன். அப்புறம் கையில் எடுத்தேன். அது விசித்திரமா இருந்தது. அத என் நண்பர்கள் எல்லாத்தையும் கூப்ட்டு காமிச்சேன். எல்லாரும் அத வெச்சு விளையாண்டோம். ஆனா அடுத்த நாளே
அந்த குண்டு காணாமப் போயிடுச்சு. அப்ப நான்
தேடிக்கிட்டே இருந்தேன். அந்த நேரம் என் நண்பர்கள்
எல்லாம் என் வீட்டுக்கு வந்தாங்க. வந்தவங்க
தேடிக்கொடுத்துட்டாங்க. எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா
இருந்துச்சு. அடுத்த நாள் அந்தக் குண்டத் தொடும்போது
விசித்திரமான ஒரு சத்தம் கேட்டது. அப்ப அது
ஒரு மந்திர குண்டுன்னு நெனச்சுக்கிட்டேன்.
அப்புறம் ரொம்ப சத்தம் கேட்டது. அத
நான் இசையின்னு நெனச்சேன்.
S. வசந்தி (ஐந்தாம் வகுப்பு)
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
காமராஜ் நகர், சுந்தராபுரம்,
கோயம்புத்தூர்.
Azhagaana karpanai - sirumi vasanthikku vaazhththukkal...
பதிலளிநீக்குNanba, pudhiya muyarchikku ennudaiya vaazhthukkal... Thodarndhu siruvar padaipugalaip padhupadhividungal..
தொடர்ந்து குழந்தைகளுக்கான படைப்புகள் வெளியாகும். குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தவும். நன்றி.
நீக்கு