கறுப்புப் பூனை
ஒரு
அடர்ந்த காட்டில் ஒரு முயல் இருந்தது. அதற்கு
பக்கத்து வீட்டில் கறுப்புப் பூனை ஒன்றும் இருந்தது. ஆனால் மானும் குதிரையும்தான் முயலுக்குப் பிடித்தமான
நண்பர்கள். அதனோடுதான் எப்போதும் விளையாடி வந்தது.
ஒரு
நாள் முயலை அந்தக் கறுப்புப் பூனை விளையாட அழைத்தது. அதற்கு முயல், “உன்னுடன் விளையாடினால் உன் மீதுள்ள
கறுப்பு நிறம் எனக்கும் ஒட்டிக்கொள்ளும். போ! இங்கே இருந்து” என்று சொல்லிவிட்டது. மறுநாள் பூனை மறுபடியும் விளையாடலாமா எனக் கேட்டது.
அதற்கு முயல் விளையாடலாம்! விளையாடலாம்! என்று சொன்னது.
இப்பொழுது
எனக்கு பச்சை இலைகளும் கேரட்டும் வேண்டுமே என முயல் கேட்டது. கறுப்புப் பூனை உடனே எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தது. இப்பொழுது விளையாடலாமா… என்றது பூனை. விளையாட்டா…!
“எனக்கு உணவு தேட சோம்பலா இருந்துச்சு, அதனாலதான் உன்ன வேல வாங்குனேன்” நீ கொடுத்த
உணவுக்கு நன்றி என்றது முயல். சொல்லிவிட்டு
புதருக்குள் குதித்துக்குதித்து ஓடியது.
அங்கு
ஒரு குழி இருந்ததை அறியாத முயல் அதற்குள் தவறி விழுந்தது. உடனே முயல் தன் நண்பர்களை
அழைத்தது. மான் நண்பன் வந்தான். விரைவாக என்னைக் காப்பாற்று என்று கேட்டது முயல். எத்தனை முறை என்னையும் என் குழந்தைகளையும் கிண்டல்
செய்திருப்பாய் என்று சொல்லிவிட்டு மான் ஓடிவிட்டது. அடுத்ததாக வந்த குதிரையும் எனக்கு
இப்பொழுதெல்லாம் சரியாக பார்வை தெரிவதில்லை, என்னை மன்னித்துவிடு என்று சொல்லிவிட்டு
சென்றது. அப்பொழுது அந்த வழியாக வந்த கறுப்புப்பூனை
குழியை எட்டிப்பார்த்தது. என்ன ஆச்சு முயலே
எனக்கூறிக்கொண்டே ஒரு நீண்ட குச்சியை குழிக்குள் நீட்ட…. முயல் அதில் ஏறி தப்பித்தது.
வ. மனோஜ்
ஐந்தாம் வகுப்பு,
ஆதிலட்சுமி துவக்கப்பள்ளி,
சுந்தராபுரம், கோயம்புத்துர்.
கருத்துகள்
கருத்துரையிடுக