பேசும் புத்தகம்



ஒரு நாள் காலை சூர்யா என்ற சிறுவனுக்கு அவன் அப்பா ஒரு கதைப் புத்தகம் வாங்கிக்கொடுத்தார். அன்று இரவு சாப்பிட்டுவிட்டு சூர்யா தன் அறைக்குச் சென்றான். அப்பொழுது அப்பா வாங்கித் தந்த கதைப்புத்தகத்தை எடுத்துப் பார்க்கத் தோன்றியது.  அதை எடுத்துப்பார்த்தால் அதில் ஒன்றுமே எழுதியிருப்பது போன்று தெரியவில்லை.  ஆனால் அதில் வாய் போன்ற உருவம் ஒன்று வரையப்பட்டிருந்தது. 

சூர்யா அதை மெதுவாகத் தொட்டுப்பார்த்தான்.  தீண்டியவுடன் அது திடீரென கதை சொல்லத் தொடங்கியது.  அவனுக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தாலும், அதன் குரலும் கதையும் மிகவும் பிடித்திருந்தது.  தினமும் சூர்யா அதில் மூன்று கதைகள் கேட்பான். 

ஒரு நாள் இரவு உணவை முடித்துவிட்டு அந்த புத்தகத்திடம் கதை கேட்கச் சென்றான். அங்கே புத்தகம் காணவில்லை.  வீடு முழுவதும் சூர்யா புத்தகத்தை தேடினான்.  எங்கே தேடியும் புத்தகம் கிடைக்கவில்லை. சோகத்துடன் சென்று தன் அறையில் படுத்துக்கொண்டான். 

அன்று தூக்கத்தில் அவனுக்கொரு கனவு வந்தது.  கனவில் ஒரு புத்தகம் இருந்தது.  கனவில் வந்த புத்தகம் அவனுடன் பேசியது.  “நான் உன் நண்பனிடம் இருக்கிறேன். நேற்று உன் நண்பனை பார்க்கச் செல்லும்பொழுது என்னை எடுத்துக்கொண்டு போனவன் தெரியாமல் அங்கேயே மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டாய்” என்றது புத்தகம்.

அதிகாலையில் எழுந்துகொண்ட சூர்யா உடனே தன் நண்பன் வீட்டிற்குச் சென்று புத்தகத்தை பத்திரமாக எடுத்துக்கொண்டு வந்தான்.  அன்றிலிருந்து ஒருநாளும் அந்தக் கதை பேசும் புத்தகத்தை தொலைக்காமல் பத்திரமாக வைத்திருந்தான்.  கதைகளால் நிரம்பிக்கொண்டே இருந்தது அவனது அறை.


S. ஸ்ரீஹரி (ஐந்தாம் வகுப்பு)
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
காமராஜ் நகர், சுந்தராபுரம்,
கோயம்புத்தூர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மரங்களோடு பேசுதல்

பூத்தொட்டி