வண்ண மரம்
ஒரு
ஊரில் கதிர் என்ற சிறுவன் இருந்தான். அவன் பள்ளியில் செடி ஒன்று இருந்தது. அந்தச் செடியின் ஒரு இலை மட்டும் மிகவும் அழகாக
இருக்கும். கதிருக்கு மிகப் பிடித்தமான இலையாக
அது இருந்தது. தினமும் அந்த இலையைப் பார்த்துக்கொண்டே
இருப்பது அவனுக்கு விருப்பமானது.
ஒருநாள்
அவன் அந்த இலையையே பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது ஆசிரியர் அவனிடம், “என்ன பார்த்துக்
கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். உடனே கதிர் ஆசிரியரிடம் “இங்கே பாருங்கள், இந்த
இலை எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது!” என்றான். ஆசிரியர் கதிரிடம், “அந்த இலையை நீயே
எடுத்துக்கொள்” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டார்.
அவனுக்குப்
பிரியமான அந்த இலையோடு அன்று வீட்டிற்கு சென்றான். மறுநாள் அவனது பள்ளி விடுமுறை என்று
அறிவித்திருந்தார்கள். அவனுக்கு விருப்பமான அந்த இலையை அன்றைய நாளெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான். அப்பொழுது அந்த இலை திடீரென்று நிறைய வண்ணங்களால்
நிறைந்தது. அதனைப் பார்த்து வியந்துபோனவன்
அந்த இலையை எடுத்துக்கொண்டுபோய் காட்டிற்குள் வீசினான்.
இலை
விழுந்த காட்டிற்குள் அன்றைய நாள் பெரிதாக மழை பெய்தது. வண்ண இலை மண்ணுக்குள் புதைந்தது. கொஞ்ச நாட்களில் புதைந்த இலை பெரிய மரமாக மாறியிருந்தது. அந்த மரத்தின் ஒவ்வொரு இலையும் பலப்பல வண்ணங்களால்
நிரம்பியிருந்தது.
இரண்டு
மாதங்களுக்குப் பிறகு கதிருக்கு தான் இலையை வீசிய காட்டிற்குள் சென்று பார்க்கத் தோன்றியது.
இலை விழுந்த இடத்தில் வண்ண வண்ண இலைகள் நிறைந்த மரம் இருந்ததைப் பார்த்தவன் அசையாது
நின்றான். ஓடிச்சென்று அனைத்து நண்பர்களையும் அழைத்துவந்து காண்பித்தான். அனைவரும் அந்த மரத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.
அங்குள்ள அனைவருக்கும் அந்த மரம் பிடித்திருந்தது. அனைவரும் சேர்ந்து அதற்கு வண்ண மரம்
என்று பெயர் வைத்து சிரித்தனர்.
S.
ஸ்ரீஹரி (ஐந்தாம் வகுப்பு)
ஊராட்சி
ஒன்றிய துவக்கப்பள்ளி
காமராஜ்
நகர், சுந்தராபுரம்,
கோயம்புத்தூர்.
கருத்துகள்
கருத்துரையிடுக