மரத்தின் கதை
•
ஒரு
ஊரில் ஒரு வீடு. அந்த வீட்டுக்கு கிட்டத்தில் ஒரு மாமரம் இருந்தது. அந்த மரத்தில் பறவைகள் பழம் சாப்பிட்டுவிட்டு எச்சமிட்டுச்
சென்றன. அவை எச்சமிட்டுவிட்டு சென்ற இடத்தில்
புதிய மாமரம் வளரத் தொடங்கியது. அந்த மாமரம்
வளர்ந்தபின் அவற்றின் இலைகள் கீழே விழுந்தன.
அந்த மாமரத்தின் அருகில் பூக்கள் பூத்தன.
அந்த
மாரத்தின் அருகே பள்ளி ஒன்று இருந்தது. அந்தப் பள்ளியில் தேசியக்கொடி ஒன்று இருந்தது. அந்த மாமரத்தில் மாம்பழம் பழுத்தது. அதன்பின் அதை பறவைகள் கொத்திச் சாப்பிட்டன. பூக்கள் மிகவும் அழகான பூக்களாக பூத்துக்கொண்டிருந்தன
அந்த வீட்டில் இருந்து. மனிதர்கள் பழம் பறித்துச்
சாப்பிட்டார்கள். அந்தப் பழம் மிகவும் சுவையாக
இருந்ததனால் மீண்டும் மீண்டும் பரித்துச் சாப்பிட்டார்கள்.
மறுபடியும்
அந்த மரத்தில் பறவைகள் உட்கார்ந்தன. பழங்களை
சாப்பிட்டன. திடீரென அந்த மரம் கீழே சாய்ந்தது. பழங்களை சாப்பிட்டுக்கொண்டிருந்த பறவைகள் இறந்தன.
•
மோனிஷா, அரசுராஜா, த.மாரீஸ்வரகுமார், முத்து
சூரியா, சிவனேசன் – ஆறாம் வகுப்பு
காயத்ரி, ரத்னப்பிரியா, சர்மிளா – ஏழாம் வகுப்பு
அரசு
மேல்நிலைப் பள்ளி, படந்தால், சாத்தூர்.
•
கருத்துகள்
கருத்துரையிடுக