இடுகைகள்

வண்ண மரம்

ஒரு ஊரில் கதிர் என்ற சிறுவன் இருந்தான். அவன் பள்ளியில் செடி ஒன்று இருந்தது.  அந்தச் செடியின் ஒரு இலை மட்டும் மிகவும் அழகாக இருக்கும்.  கதிருக்கு மிகப் பிடித்தமான இலையாக அது இருந்தது.  தினமும் அந்த இலையைப் பார்த்துக்கொண்டே இருப்பது அவனுக்கு விருப்பமானது.  ஒருநாள் அவன் அந்த இலையையே பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது ஆசிரியர் அவனிடம், “என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். உடனே கதிர் ஆசிரியரிடம் “இங்கே பாருங்கள், இந்த இலை எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது!” என்றான். ஆசிரியர் கதிரிடம், “அந்த இலையை நீயே எடுத்துக்கொள்” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டார். அவனுக்குப் பிரியமான அந்த இலையோடு அன்று வீட்டிற்கு சென்றான். மறுநாள் அவனது பள்ளி விடுமுறை என்று அறிவித்திருந்தார்கள். அவனுக்கு விருப்பமான அந்த இலையை அன்றைய நாளெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான்.  அப்பொழுது அந்த இலை திடீரென்று நிறைய வண்ணங்களால் நிறைந்தது.  அதனைப் பார்த்து வியந்துபோனவன் அந்த இலையை எடுத்துக்கொண்டுபோய் காட்டிற்குள் வீசினான்.  இலை விழுந்த காட்டிற்குள் அன்றைய நாள் பெரிதாக ம...

பேசும் புத்தகம்

ஒரு நாள் காலை சூர்யா என்ற சிறுவனுக்கு அவன் அப்பா ஒரு கதைப் புத்தகம் வாங்கிக்கொடுத்தார். அன்று இரவு சாப்பிட்டுவிட்டு சூர்யா தன் அறைக்குச் சென்றான். அப்பொழுது அப்பா வாங்கித் தந்த கதைப்புத்தகத்தை எடுத்துப் பார்க்கத் தோன்றியது.  அதை எடுத்துப்பார்த்தால் அதில் ஒன்றுமே எழுதியிருப்பது போன்று தெரியவில்லை.  ஆனால் அதில் வாய் போன்ற உருவம் ஒன்று வரையப்பட்டிருந்தது.  சூர்யா அதை மெதுவாகத் தொட்டுப்பார்த்தான்.  தீண்டியவுடன் அது திடீரென கதை சொல்லத் தொடங்கியது.  அவனுக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தாலும், அதன் குரலும் கதையும் மிகவும் பிடித்திருந்தது.  தினமும் சூர்யா அதில் மூன்று கதைகள் கேட்பான்.  ஒரு நாள் இரவு உணவை முடித்துவிட்டு அந்த புத்தகத்திடம் கதை கேட்கச் சென்றான். அங்கே புத்தகம் காணவில்லை.  வீடு முழுவதும் சூர்யா புத்தகத்தை தேடினான்.  எங்கே தேடியும் புத்தகம் கிடைக்கவில்லை. சோகத்துடன் சென்று தன் அறையில் படுத்துக்கொண்டான்.  அன்று தூக்கத்தில் அவனுக்கொரு கனவு வந்தது.  கனவில் ஒரு புத்தகம் இருந்தது.  கனவில் வந்த புத்தகம் அவனுடன் பேசியது...

பிரியாத நண்பர்கள்

ஒரு ஊரில் ஒரு அழகான தோட்டம் இருந்தது.  அந்த தோட்டத்தில் அழகான பூ ஒன்று இருந்தது. ஒரு நாள் ஒரு ஆட்டுக்குட்டி உணவு தேடி அந்தப் பூந்தோட்டப் பாதையில் சென்றது. அப்பொழுது அந்தத் தோட்டத்தில் இருந்த பூவை ஆடு பார்த்தது. அந்த ஆடு செடியை சாப்பிடச் சென்ற பொழுது அந்தப் பூ மிகவும் வருந்தியது. அதனைப் பார்த்த ஆடு பரிதாபப்பட்டு நான் உன்னை சாப்பிடமாட்டேன் என்று கூறியது.  ஆடும் பூவும் நண்பர்கள் ஆகினர். அப்பொழுது தேனி ஒன்று அந்தப் பூவில் தேனெடுக்க வந்தது.  அந்தத் தேனிக்கோ நண்பர்களே இல்லை. பூவையும் ஆட்டுக்குட்டியையும் பார்த்த தேனி என்னையும் உங்கள் நண்பனாக்கிக்கொள்வீர்களா? என ஆசையாகக் கேட்டது.  பூவும் ஆட்டுக்குட்டியும் உடனே சரி என்றன.  ஒருநாள் மூன்று பேரும் தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபொழுது தேனீ, நாம் அனைவரும் ஊரைச்சுற்றிப் பார்க்கச் செல்லலாமா என்று கேட்டது.  அப்பொழுது ஆட்டுக்குட்டி சரி என்று உடனே தலையாட்ட, பூவுக்கோ வருத்தமாகிவிட்டது. உடனே ஆட்டுக்குட்டி பூவைப்பார்த்து ஏன் கவலைப்படுகிறாய் என்று கேட்டது. அதற்கு பூ, நீங்கள் இரண்டு பேரும் ஊரை சுற்றிப்பார்த்துவிட்டு வாருங்...

பசுமையான 5000 மலைக்காடுகள்

பூமி ஒரு நாள் விண்வெளியில் என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டிருந்தது.  அப்போது ஒரு இடத்தில் 5000 மலைகள் கொண்ட ஒரு காடு இருந்தது.  அந்தக் காட்டில் யானை, புலி, முயல், மான், கரடி ஆகியவை மட்டுமல்லாமல் நிறைய அதிசய விலங்குகள் மற்றும் பறவைகள் சந்தோசமாக இருந்தன.  அதனைப் பார்த்து பூமிக்கு ஒரே மகிழ்ச்சி.  என்னுடைய கிரகத்தில் விலங்குகள் இவ்வளவு சந்தோசமாக இருக்கிறார்களே என பூமி சொல்லிச் சொல்லி மகிழ்ந்தது.  அதனை மற்ற கோள்களிடமும் கூறியது.  மற்ற கோள்களும் அதனை வந்து பார்த்து மகிழ்ச்சியடைந்தன.  உடனே ஒரு கோள் சொன்னது நாமும் ஏன் விலங்குகளாக மாறி இந்த பசுமையான அதிசய காட்டிற்குள் செல்லக்கூடாது.  ஆனால் நம்மால் எப்படி விலங்குகளாக மாற முடியும்? என்றது வேறொரு கோள்.  வாருங்கள் நாம் சூரியனிடம் கேட்போம், அவர் நம்மை விலங்குகளாக மாற்றுவார் என்றது மற்றொன்று. அனைவரும் சூரியனிடம் சென்று கேட்டனர். சூரியனே, பூமியில் பசுமையான அழகிய காடு ஒன்று இருக்கிறது. அதில் விலங்குகள் பறவைகள் அனைத்தும் சந்தோசமாக இருக்கின்றன. அதனால் நாங்களும் இன்று ஒரு நாள் மட்டும் விலங்...

கறுப்புப் பூனை

ஒரு அடர்ந்த காட்டில் ஒரு முயல் இருந்தது.  அதற்கு பக்கத்து வீட்டில் கறுப்புப் பூனை ஒன்றும் இருந்தது.  ஆனால் மானும் குதிரையும்தான் முயலுக்குப் பிடித்தமான நண்பர்கள். அதனோடுதான் எப்போதும் விளையாடி வந்தது.  ஒரு நாள் முயலை அந்தக் கறுப்புப் பூனை விளையாட அழைத்தது.  அதற்கு முயல், “உன்னுடன் விளையாடினால் உன் மீதுள்ள கறுப்பு நிறம் எனக்கும் ஒட்டிக்கொள்ளும். போ! இங்கே இருந்து” என்று சொல்லிவிட்டது.  மறுநாள் பூனை மறுபடியும் விளையாடலாமா எனக் கேட்டது. அதற்கு முயல் விளையாடலாம்! விளையாடலாம்! என்று சொன்னது. இப்பொழுது எனக்கு பச்சை இலைகளும் கேரட்டும் வேண்டுமே என முயல் கேட்டது.  கறுப்புப் பூனை உடனே எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தது.  இப்பொழுது விளையாடலாமா… என்றது பூனை.  விளையாட்டா…!  “எனக்கு உணவு தேட சோம்பலா இருந்துச்சு, அதனாலதான் உன்ன வேல வாங்குனேன்” நீ கொடுத்த உணவுக்கு நன்றி என்றது முயல்.  சொல்லிவிட்டு புதருக்குள் குதித்துக்குதித்து ஓடியது. அங்கு ஒரு குழி இருந்ததை அறியாத முயல் அதற்குள் தவறி விழுந்தது. உடனே முயல் தன் நண்பர்களை அழைத்தது.  மான...

மந்திர குண்டு

ஒரு நாள் நான் விளையாடிட்டு இருக்கும்போது ஒரு குண்டப் பாத்தேன்.  அப்புறம் கையில் எடுத்தேன்.  அது விசித்திரமா இருந்தது.  அத என் நண்பர்கள் எல்லாத்தையும் கூப்ட்டு காமிச்சேன்.  எல்லாரும் அத வெச்சு விளையாண்டோம். ஆனா அடுத்த நாளே அந்த குண்டு காணாமப் போயிடுச்சு.  அப்ப நான் தேடிக்கிட்டே இருந்தேன்.  அந்த நேரம் என் நண்பர்கள் எல்லாம் என் வீட்டுக்கு வந்தாங்க.  வந்தவங்க தேடிக்கொடுத்துட்டாங்க.  எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு.  அடுத்த நாள் அந்தக் குண்டத் தொடும்போது விசித்திரமான ஒரு சத்தம் கேட்டது.  அப்ப அது ஒரு மந்திர குண்டுன்னு நெனச்சுக்கிட்டேன்.  அப்புறம் ரொம்ப சத்தம் கேட்டது.  அத நான் இசையின்னு நெனச்சேன். S. வசந்தி (ஐந்தாம் வகுப்பு) ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி காமராஜ் நகர், சுந்தராபுரம், கோயம்புத்தூர்.