இடுகைகள்

பூத்தொட்டி

ஒரு ஊர்ல ஒரு பூத்தொட்டி. அதுல நெறையா பூ இருந்துச்சு. ஒரு நாள் தேனீக்கள் வந்து தேன் குடிச்சது. ஒரு நாள் அந்த பூவெல்லாம் வாடிப்போச்சு. ஒரு பையன் அதப்பாத்து அழுதுட்டு இருந்தான். பூவெல்லாம் வாடிருச்சுனு அழுதான். அவங்க அம்மா, அப்பா எல்லாம் வந்து ஏன் அழறேன்னு கேட்டாங்க. நான் ஆசையா வளத்த பூவெல்லாம் வாடிருச்சின்னு அவன் சொன்னான். மறுபடியும் பூ வளந்துரும்னு அம்மா சொன்னாங்க. பிறகு பட்டாம்பூச்சி வந்து ஏன் அழறேன்னு கேட்டுச்சு. நான் வளர்த்த பூ வாடிருச்சுனு பையன் சொன்னான். அப்ப நான் எங்க போயி உக்காருவேன்னு பட்டாம்பூச்சி கேட்டுச்சு. உனக்கு மறுபடி பூ வளத்தித் தரேன். அதுவரை தோட்டத்துல இருக்குற பூச்செடில இருன்னு பையன் சொன்னான். சரி அங்கயே போறேன்னு பட்டாம்பூச்சி பறந்துடுச்சு. • எம். நாகஜோதி - கே. வைஷ்ணவி ஐந்தாம் வகுப்பு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி கணேசபுரம், கோயம்புத்தூர்.
படம்
அரவிந்த் ஆறாம் வகுப்பு விஎஸ்எஸ்எம் உயர்நிலைப்பள்ளி சுந்தராபுரம் கோயம்புத்தூர்
படம்
குட்டி ஆகாயம் சிறார் இதழ்  இதழ்  4  /  கதை  2 மூன்று வண்ணத்துப்பூச்சிகள் கற்கள் மேல உட்கார்ந்திருத்துச்சாம். அங்க ஒரு தவளை வந்துச்சாம். எனக்கு ரொம்பப் பசிக்குது எங்கள சாப்பிடப் போறேன்னு சொல்லுச்சாம். எங்களயா சாப்பிடப்போற.... முடிஞ்சா பிடி பாப்போம்னு சொல்லி ..... மூன்றும் 1.... 2.... 3.... சொல்லிச்சொல்லி, பறந்து பறந்து விளையாண்டுச்சாம். • கதை சொல்லி கு. பாலாஜி நான்காம் வகுப்பு இராசப்பா உதவி பெறும் தொடக்கப்பள்ளி, கீழக்குண்டலபாடி ஒளிப்படம் வினோத் பாலுசாமி
படம்
குட்டி ஆகாயம் சிறார் இதழ்  இதழ் 4 / கதை 1 • ஒரு ஊர்ல ஒரு படகு இருந்துச்சாம். அந்தப் படக செஞ்சு அப்பதான கட்டீருந்தாங்க. அந்தப் படகுக்கு கடலோட கடைசிவரை போயிட்டு வரணும்னு ஆசையாம். ஆனா அந்தப்படக எப்பவும் நடுக்கடல் வரை கூட்டிட்டுப் போயிட்டு, மீன் பிடிச்சிட்டு வந்து கட்டீருவாங்களாம். அந்தப் படகுக்கு ரொம்பநாள் ஆசையாமா அந்தக் கடைசி வரை போயிட்டு வரணும்னு. ஒரு விடுமுறை நாள்ல ஒரு குடும்பம் கடலுக்கு வந்தாங்களாம். எல்லாரும் அந்தப் படகுல போனாங்களாமா. கடலோட கடைசி வரைக்கும் போகலாம்னு அவங்க நெனச்சாங்களாமா. அப்பதான் அந்தப் படகோட ஆசையும் நிறைவேறுதுன்னு போனாங்களாமா. • ஒளிப்படம் அனாமிகா கதைசொல்லி கனிமொழி (ஐந்தாம் வகுப்பு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, காமராஜ் நகர், சுந்தராபுரம், கோவை. •
படம்
     எலிக்கதை அம்மா எலி குட்டி எலி ரெண்டும் ஜாலியா விளையாடுவாங்க. ஒரு நாள் நைட் அம்மா எலி வரல. குட்டி எலி தேடுச்சு. அப்போ எங்கயோ தேடி அம்மா எலிய கண்டுபிடிச்சுச்சு. இன்னும் நாலு எலியும் கூட சேந்துகிச்சு. • கதையும் ஓவியமும் பெர்ஷோனா இரண்டாம் வகுப்பு டான்போஸ்கோ இல்லம், சென்னை. (குட்டி ஆகாயம் முதல் இதழில் வெளியான கதை) 
படம்
• ஒரு ஊருல ஒரு அழகான வயல் இருந்துச்சா அங்க ஒரு சோளக்காட்டு பொம்மை இருந்துச்சாம் ஒரு நாளு திடீர்னு ஒரு சந்தோசமான சத்தம் வந்துச்சா எங்க இருந்து சத்தம் வருதுன்னு பொம்மை தேடிக்கிட்டே போச்சு அப்ப ஒரு குகைக்குள்ள இருந்து சத்த வற்றத தெரிஞ்சுக்கிட்ட அந்த பொம்மை அதுக்குள்ள போச்சா அங்க வரிக்குதிர நிறத்துல ஒரு பெட்டி இருந்துச்சா அது மேல எல்லா பறவையும் ஏறி விளையாடிக்கிட்டு இருந்துச்சா அத பாத்துட்டு அந்த பொம்மையும் தொட்டுப்பாத்துச்சு அப்பவும் அந்த சந்தோசமான சத்தம் கேட்டுச்சு அந்த சத்தத்தக் கேட்டு எல்லா பறவையும் விலங்கும் மகிழ்ச்சியா ஆட்டம் போட்டாங்களாம். • கதை - வி. அறிவரசு (இரண்டாம் வகுப்பு) காரைக்குடி ஓவியம் – தமிழ்நாடு அறிவியல் மன்றக் குழந்தைகள் திண்டுக்கல் • குட்டி ஆகாயம் இதழ் இரண்டில் (செப்டம்பர் 2016) வெளியான கதை
படம்
கோவை அருகிலுள்ள தர்மலிங்கேஸ்வரர் மலைச்சூழல் எப்படியோ மனதிற்கு நெருங்கிய ஒன்று. காரணத்தோடும் காரணமில்லாமலும் அருகில் உள்ளவர்களை அழைத்துக்கொண்டு அந்த மலையை ஏறி இறங்குவேன். கொஞ்சம் உயரமான மலையிலிருந்து தெரியும் தனித்தனி பெரிய மலைகளும், பாலக்காட்டு சாலையில் தெரியும் மரங்களும், ரயில் பாதைகளும், மாலையில் திரியும் காற்றும் ..... அப்படித்தான் அது நெருக்கமாக இருக்கிறது. ஒரு சிறப்பான நாளில் பல நுறு மக்கள் திரண்டிருந்த மாலையில் ஒரு கிராமத்து மக்கள் தங்கள் பாரம்பரிய பாடலையும் ஆடலையும் நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். அவ்வளவு அழகான அந்தப் பாடலின் மெட்டில் எங்கள் குழந்தைகளோடு பாடுவதற்காக ஒரு பாடலை எழுதிப்பார்த்தேன்.      • தன்னே னன்னே தான னன்னே தானேனன்னா …தனே தானானே னானனன்னே தானேனன்னா… விண்மீனே விண்மீனே எங்க போறீங்க - நாங்க கத கேக்க காத்திருக்கோம் கண் சிமிட்டுங்க ... கதிரவனே கதிரவனே எங்கிருக்கீங்க ....- நாங்க விடியலுக்கு காத்திருக்கோம் எழுந்து வந்துருங்க .. மேகங்களே மேகங்களே எங்க ... போறீங்க - எங்க நெலத்துலதான் தேடுக...