கோவை அருகிலுள்ள தர்மலிங்கேஸ்வரர் மலைச்சூழல் எப்படியோ மனதிற்கு நெருங்கிய ஒன்று. காரணத்தோடும் காரணமில்லாமலும் அருகில் உள்ளவர்களை அழைத்துக்கொண்டு அந்த மலையை ஏறி இறங்குவேன். கொஞ்சம் உயரமான மலையிலிருந்து தெரியும் தனித்தனி பெரிய மலைகளும், பாலக்காட்டு சாலையில் தெரியும் மரங்களும், ரயில் பாதைகளும், மாலையில் திரியும் காற்றும் ..... அப்படித்தான் அது நெருக்கமாக இருக்கிறது. ஒரு சிறப்பான நாளில் பல நுறு மக்கள் திரண்டிருந்த மாலையில் ஒரு கிராமத்து மக்கள் தங்கள் பாரம்பரிய பாடலையும் ஆடலையும் நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். அவ்வளவு அழகான அந்தப் பாடலின் மெட்டில் எங்கள் குழந்தைகளோடு பாடுவதற்காக ஒரு பாடலை எழுதிப்பார்த்தேன்.    















தன்னே னன்னே தான னன்னே தானேனன்னா …தனே
தானானே னானனன்னே தானேனன்னா…

விண்மீனே விண்மீனே எங்க போறீங்க - நாங்க
கத கேக்க காத்திருக்கோம் கண் சிமிட்டுங்க...

கதிரவனே கதிரவனே எங்கிருக்கீங்க....- நாங்க
விடியலுக்கு காத்திருக்கோம் எழுந்து வந்துருங்க..

மேகங்களே மேகங்களே எங்க... போறீங்க - எங்க
நெலத்துலதான் தேடுகிறோம் குதிச்சு வந்துருங்க...

இளங்காத்தே இளங்காத்தே எங்கிருக்கீங்க - இங்க
வேத்திருக்கோம் காத்திருக்கோம் கொஞ்சம் வீசுங்க....

குருவிகளே குருவிகளே எங்கே போறீங்க - எங்க
வயலுலதான் நெல்லுருக்கு கொத்த வந்துருங்க...

நாடோடி மனிதர்களே எங்கிருக்கீங்க - நல்ல
உணவிருக்கு உழவிருக்கு இங்க வந்துருங்க....


தன்னே னன்னே தான னன்னே தானேனன்னா …தனே
தானானே னானனன்னே தானேனன்னா…

நிழல்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மரங்களோடு பேசுதல்

கறுப்புப் பூனை

பூத்தொட்டி