குட்டி ஆகாயம் சிறார் இதழ் 
இதழ் 4 / கதை 1













ஒரு ஊர்ல ஒரு படகு இருந்துச்சாம்.
அந்தப் படக செஞ்சு அப்பதான கட்டீருந்தாங்க.
அந்தப் படகுக்கு கடலோட கடைசிவரை
போயிட்டு வரணும்னு ஆசையாம்.
ஆனா அந்தப்படக எப்பவும் நடுக்கடல் வரை
கூட்டிட்டுப் போயிட்டு, மீன் பிடிச்சிட்டு வந்து கட்டீருவாங்களாம்.
அந்தப் படகுக்கு ரொம்பநாள் ஆசையாமா
அந்தக் கடைசி வரை போயிட்டு வரணும்னு.
ஒரு விடுமுறை நாள்ல ஒரு குடும்பம் கடலுக்கு வந்தாங்களாம்.
எல்லாரும் அந்தப் படகுல போனாங்களாமா.
கடலோட கடைசி வரைக்கும் போகலாம்னு
அவங்க நெனச்சாங்களாமா.
அப்பதான் அந்தப் படகோட ஆசையும்
நிறைவேறுதுன்னு போனாங்களாமா.

ஒளிப்படம்
அனாமிகா

கதைசொல்லி
கனிமொழி (ஐந்தாம் வகுப்பு)
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி,
காமராஜ் நகர், சுந்தராபுரம்,
கோவை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மரங்களோடு பேசுதல்

கறுப்புப் பூனை

பூத்தொட்டி