• ஒரு ஊருல ஒரு அழகான வயல் இருந்துச்சா அங்க ஒரு சோளக்காட்டு பொம்மை இருந்துச்சாம் ஒரு நாளு திடீர்னு ஒரு சந்தோசமான சத்தம் வந்துச்சா எங்க இருந்து சத்தம் வருதுன்னு பொம்மை தேடிக்கிட்டே போச்சு அப்ப ஒரு குகைக்குள்ள இருந்து சத்த வற்றத தெரிஞ்சுக்கிட்ட அந்த பொம்மை அதுக்குள்ள போச்சா அங்க வரிக்குதிர நிறத்துல ஒரு பெட்டி இருந்துச்சா அது மேல எல்லா பறவையும் ஏறி விளையாடிக்கிட்டு இருந்துச்சா அத பாத்துட்டு அந்த பொம்மையும் தொட்டுப்பாத்துச்சு அப்பவும் அந்த சந்தோசமான சத்தம் கேட்டுச்சு அந்த சத்தத்தக் கேட்டு எல்லா பறவையும் விலங்கும் மகிழ்ச்சியா ஆட்டம் போட்டாங்களாம். • கதை - வி. அறிவரசு (இரண்டாம் வகுப்பு) காரைக்குடி ஓவியம் – தமிழ்நாடு அறிவியல் மன்றக் குழந்தைகள் திண்டுக்கல் • குட்டி ஆகாயம் இதழ் இரண்டில் (செப்டம்பர் 2016) வெளியான கதை
இடுகைகள்
2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கோவை அருகிலுள்ள தர்மலிங்கேஸ்வரர் மலைச்சூழல் எப்படியோ மனதிற்கு நெருங்கிய ஒன்று. காரணத்தோடும் காரணமில்லாமலும் அருகில் உள்ளவர்களை அழைத்துக்கொண்டு அந்த மலையை ஏறி இறங்குவேன். கொஞ்சம் உயரமான மலையிலிருந்து தெரியும் தனித்தனி பெரிய மலைகளும், பாலக்காட்டு சாலையில் தெரியும் மரங்களும், ரயில் பாதைகளும், மாலையில் திரியும் காற்றும் ..... அப்படித்தான் அது நெருக்கமாக இருக்கிறது. ஒரு சிறப்பான நாளில் பல நுறு மக்கள் திரண்டிருந்த மாலையில் ஒரு கிராமத்து மக்கள் தங்கள் பாரம்பரிய பாடலையும் ஆடலையும் நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். அவ்வளவு அழகான அந்தப் பாடலின் மெட்டில் எங்கள் குழந்தைகளோடு பாடுவதற்காக ஒரு பாடலை எழுதிப்பார்த்தேன். • தன்னே னன்னே தான னன்னே தானேனன்னா …தனே தானானே னானனன்னே தானேனன்னா… விண்மீனே விண்மீனே எங்க போறீங்க - நாங்க கத கேக்க காத்திருக்கோம் கண் சிமிட்டுங்க ... கதிரவனே கதிரவனே எங்கிருக்கீங்க ....- நாங்க விடியலுக்கு காத்திருக்கோம் எழுந்து வந்துருங்க .. மேகங்களே மேகங்களே எங்க ... போறீங்க - எங்க நெலத்துலதான் தேடுக...
சிறகு (மின்மினிகளின் கதை தேடி ……)
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
• யாரெல்லாம் நட்சத்திரத்துக்கு வர்றீங்க … நான் … நான் … … … … …. இதுக்கு முன்னாடி யாராவது அங்க போயிருக்கீங்களா …. . . இல்ல …. ம் .. கூம் … . நான் போயிருக்கேன் ! எப்பப்போன …! நேத்து நைட்டு கனவுல …. கனவுலயா …. ! சொல்லீருந்தா நாங்களும் கூட வந்துருப்போம்ல ….. . . சரி , எதுக்கு அங்க போன …? நட்சத்திரத்த தொட்டுப் பாக்கனும்ணு ஆசையா இருந்துச்சு , அதான் போனேண் . • கதைகளுக்குள் துலங்கும் பிரியங்களை நிஜமாக்கியும் கற்பனைகளை உன்னதமாக்கியும் ஒருங்கே அரவணைத்துக்கொள்ளும் விரல்கள் குழந்தைகளுடையது . ஆரஞ்சு நிறச் சூரியனின் பிரகாசத்தை , காட்டு மலரின் ஈரம் நிறைந்த மலர்ச்சியை , நிலத்தடி நீராய் நிறையும் அன்பை கதைகள் குழந்தைகளிடம் தினமும் எடுத்துச் செல்கின்றன . ஒரு குட்டி முயல் மிருதுவாக வளர்வதைப்போல் , சிறு செடி தன் நிலத்தை இறுகப்பற்றி விருட்சமாக மாறுவதைப்போல் , கடல் நீர் ஒவ்வொரு துளியாய்க் கிளம்பி மழை முகில்களாகத் திரள்வதைப்போல் குழந்தைகள் கதைகளுக்குள் உயரே நகர்ந்துகொண்டிருக்கிறார்கள ் . ...