வண்ண மரம்
ஒரு ஊரில் கதிர் என்ற சிறுவன் இருந்தான். அவன் பள்ளியில் செடி ஒன்று இருந்தது. அந்தச் செடியின் ஒரு இலை மட்டும் மிகவும் அழகாக இருக்கும். கதிருக்கு மிகப் பிடித்தமான இலையாக அது இருந்தது. தினமும் அந்த இலையைப் பார்த்துக்கொண்டே இருப்பது அவனுக்கு விருப்பமானது. ஒருநாள் அவன் அந்த இலையையே பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது ஆசிரியர் அவனிடம், “என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். உடனே கதிர் ஆசிரியரிடம் “இங்கே பாருங்கள், இந்த இலை எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது!” என்றான். ஆசிரியர் கதிரிடம், “அந்த இலையை நீயே எடுத்துக்கொள்” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டார். அவனுக்குப் பிரியமான அந்த இலையோடு அன்று வீட்டிற்கு சென்றான். மறுநாள் அவனது பள்ளி விடுமுறை என்று அறிவித்திருந்தார்கள். அவனுக்கு விருப்பமான அந்த இலையை அன்றைய நாளெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான். அப்பொழுது அந்த இலை திடீரென்று நிறைய வண்ணங்களால் நிறைந்தது. அதனைப் பார்த்து வியந்துபோனவன் அந்த இலையை எடுத்துக்கொண்டுபோய் காட்டிற்குள் வீசினான். இலை விழுந்த காட்டிற்குள் அன்றைய நாள் பெரிதாக ம...