பசுமையான 5000 மலைக்காடுகள்
பூமி ஒரு நாள் விண்வெளியில் என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டிருந்தது. அப்போது ஒரு இடத்தில் 5000 மலைகள் கொண்ட ஒரு காடு இருந்தது. அந்தக் காட்டில் யானை, புலி, முயல், மான், கரடி ஆகியவை மட்டுமல்லாமல் நிறைய அதிசய விலங்குகள் மற்றும் பறவைகள் சந்தோசமாக இருந்தன. அதனைப் பார்த்து பூமிக்கு ஒரே மகிழ்ச்சி. என்னுடைய கிரகத்தில் விலங்குகள் இவ்வளவு சந்தோசமாக இருக்கிறார்களே என பூமி சொல்லிச் சொல்லி மகிழ்ந்தது. அதனை மற்ற கோள்களிடமும் கூறியது. மற்ற கோள்களும் அதனை வந்து பார்த்து மகிழ்ச்சியடைந்தன. உடனே ஒரு கோள் சொன்னது நாமும் ஏன் விலங்குகளாக மாறி இந்த பசுமையான அதிசய காட்டிற்குள் செல்லக்கூடாது. ஆனால் நம்மால் எப்படி விலங்குகளாக மாற முடியும்? என்றது வேறொரு கோள். வாருங்கள் நாம் சூரியனிடம் கேட்போம், அவர் நம்மை விலங்குகளாக மாற்றுவார் என்றது மற்றொன்று. அனைவரும் சூரியனிடம் சென்று கேட்டனர். சூரியனே, பூமியில் பசுமையான அழகிய காடு ஒன்று இருக்கிறது. அதில் விலங்குகள் பறவைகள் அனைத்தும் சந்தோசமாக இருக்கின்றன. அதனால் நாங்களும் இன்று ஒரு நாள் மட்டும் விலங்...