குட்டி ஆகாயம் சிறார் இதழ் இதழ் 4 / கதை 2 மூன்று வண்ணத்துப்பூச்சிகள் கற்கள் மேல உட்கார்ந்திருத்துச்சாம். அங்க ஒரு தவளை வந்துச்சாம். எனக்கு ரொம்பப் பசிக்குது எங்கள சாப்பிடப் போறேன்னு சொல்லுச்சாம். எங்களயா சாப்பிடப்போற.... முடிஞ்சா பிடி பாப்போம்னு சொல்லி ..... மூன்றும் 1.... 2.... 3.... சொல்லிச்சொல்லி, பறந்து பறந்து விளையாண்டுச்சாம். • கதை சொல்லி கு. பாலாஜி நான்காம் வகுப்பு இராசப்பா உதவி பெறும் தொடக்கப்பள்ளி, கீழக்குண்டலபாடி ஒளிப்படம் வினோத் பாலுசாமி