சிறகு (மின்மினிகளின் கதை தேடி ……)
• யாரெல்லாம் நட்சத்திரத்துக்கு வர்றீங்க … நான் … நான் … … … … …. இதுக்கு முன்னாடி யாராவது அங்க போயிருக்கீங்களா …. . . இல்ல …. ம் .. கூம் … . நான் போயிருக்கேன் ! எப்பப்போன …! நேத்து நைட்டு கனவுல …. கனவுலயா …. ! சொல்லீருந்தா நாங்களும் கூட வந்துருப்போம்ல ….. . . சரி , எதுக்கு அங்க போன …? நட்சத்திரத்த தொட்டுப் பாக்கனும்ணு ஆசையா இருந்துச்சு , அதான் போனேண் . • கதைகளுக்குள் துலங்கும் பிரியங்களை நிஜமாக்கியும் கற்பனைகளை உன்னதமாக்கியும் ஒருங்கே அரவணைத்துக்கொள்ளும் விரல்கள் குழந்தைகளுடையது . ஆரஞ்சு நிறச் சூரியனின் பிரகாசத்தை , காட்டு மலரின் ஈரம் நிறைந்த மலர்ச்சியை , நிலத்தடி நீராய் நிறையும் அன்பை கதைகள் குழந்தைகளிடம் தினமும் எடுத்துச் செல்கின்றன . ஒரு குட்டி முயல் மிருதுவாக வளர்வதைப்போல் , சிறு செடி தன் நிலத்தை இறுகப்பற்றி விருட்சமாக மாறுவதைப்போல் , கடல் நீர் ஒவ்வொரு துளியாய்க் கிளம்பி மழை முகில்களாகத் திரள்வதைப்போல் குழந்தைகள் கதைகளுக்குள் உயரே நகர்ந்துகொண்டிருக்கிறார்கள ் . ...