அதிசய சிறுவன்
ஒரு ஊரில் ஒரு சிறிய வீடு. அந்த வீட்டில் ஒரு சிறுவன் மட்டும் இருந்தான். அவன் பெயர் சந்திரன். ஒருநாள் அவன் கடற்கரைக்குச் சென்றான். அங்கு ஒரு மீனைப் பிடித்தான். அதை அங்கேயே சமைத்து சாப்பிட்டுவிட்டு அருகிலேயே தூங்கிவிட்டான். மறுநாள் அவன் உடம்பில் ஏதோ மாற்றம் வந்ததுபோல் உணர்ந்தான். ஆனால் ஒன்றும் இல்லை என்று விட்டுவிட்டான். அடுத்த நாளும் உடம்பில் ஏதோ மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்தான். மீண்டும் ஒன்றும் இல்லை என விட்டுவிட்டான். இப்படியே நாட்கள் செல்லச்செல்ல அவன் உடலில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. ஒருநாள் கடைக்குச் செல்லும்பொழுது ஒருவர் சந்திரனின் உடலில் ஏதோ வித்தியாசம் இருப்பதைப் பார்த்து விபரம் கேட்டார். அப்பொழுதும் அவன் யோசித்தான். மீண்டும் அவன் உடலில் ஏதோ நிகழ்ந்திருக்கிறது என்பதை நினைத்துக்கொண்டே நடந்தான். அப்பொழுது ஒரு யோசனை வந்தது. ஒருநாள் முழுவதும் கண்ணாடிமுன் அமர்ந்து உடலையே கவனித்துக்கொண்டிருந்தால் என்ன நிகழ்கிறது என தெரிந்துகொள்ளலாம் என ஆசைப்பட்டான். நாளெல்லாம் கண்ணாடிமுன் நின்றவன் அவன் உடலைப் பா...